மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாகன எரிபொருளை சிக்கனப்படுத்த பத்து வழிகள்

சிறகு நிருபர்

Aug 30, 2014
  • eriporul1
  • உங்களது வாகனத்தின் பெட்ரோல் தொட்டியை எப்பொழுதும் முழுமையாக நிரப்பாதீர்கள். ஏனெனில் முழுமையாக நிரப்பினால் பெட்ரோல் தொட்டியில் காற்று குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக வேகமாக பெட்ரோல் ஆவியாகிவிடும்.
  • பிரேக் உபயோகப்படுத்தும் பொழுது அதிகமான பெட்ரோல் வீணாகிறது. அவசியமான போது தவிர பிற சமயத்தில் பிரேக் போடுவதை தவிர்க்கலாம்.
  • போக்குவரத்து நெரிசல் காரணமாக மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து செல்வதால் பெட்ரோல் வீணாகிறது.
  • வெப்பநிலை அதிகரிக்கும் பொழுது பெட்ரோல் விரிவடையும். எனவே மதியம் மற்றும் மாலை வேளைகளில் பெட்ரோலின் அளவு சரியாக இருக்காது. எனவே பெட்ரோலை அதிகாலை நேரங்களில் நிரப்புங்கள்.
  • லாரியில் இருந்து பெட்ரோல் பங்கிற்குள் இறக்கியவுடன் வாங்காதீர்கள். ஏனெனில் பெட்ரோல் கிடங்கின் அடியில் இருக்கும் கசடுகள் கலந்து இருக்கும். இதனால் எஞ்சின் பாதிக்கப்படும்.
  • வாகன நெரிசலில் கிளட்ச்சை பிடித்துக்கொண்டே ஓட்டுவதை தவிர்த்துவிடுங்கள்.
  • சென்றடையும் இடத்திற்கு காலம் தாமதிக்காமல், முன்னதாகவே கிளம்புவது நல்லது. ஏனெனில் வேகமாக செல்வது,வாகன நெரிசலில் காத்திருப்பது தவிர்ப்பதுடன் வேகமாக செல்லாமல் சீராக செல்வதினால் பெட்ரோலை சிக்கனப்படுத்தலாம்.
  • வாகனத்தை 3 மாதத்திற்கு ஒருமுறை பழுது நீக்கல் செய்வது மிகச்சிறந்தது. ஏனெனில் வாகனத்தில் உள்ள பிரச்சினைகளை உரிய நேரத்தில் மற்றும் சிலவற்றை சரிசெய்வதால் பெட்ரோல் சிக்கனமாகும்.
  • சமிக்ஞைக்காக காத்திருக்கும் பொழுது 30 வினாடிக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தால் தங்களது வாகனத்தை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.
  • பெட்ரோல் நிரப்பும் பொழுது ஏற்கனவே வாகனத்தில் எவ்வளவு இருக்கிறது மற்றும் இப்பொழுது எவ்வளவு சேர்க்கிறோம் என்பதை ஒரு குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுதுதான் நாம் பயன்படுத்தும் அளவு, மற்றும் பெட்ரோல் போடப்படும் அளவு தெரியும்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாகன எரிபொருளை சிக்கனப்படுத்த பத்து வழிகள்”

அதிகம் படித்தது