மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் – இறுதிப் பகுதி

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Jan 3, 2015

arun chinnaiahஅன்பார்ந்த சிறகு இணையதள வாசகர்களே வணக்கம். நாம் மிக முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறோம். இந்த உலகத்தில் இருக்கக்கூடிய சாதாரண ஓருயிர் இனத்திலிருந்து ஆறறிவு படைத்த மனிதன் வரையிலும் இனப்பெருக்கம் என்பது எப்பொழுதுமே மனித சுழற்சிக்குத் இன்றியமையாத ஒன்று. ஒரு ஆணும் பெண்ணும் முழுமையாகக்கூடி இனப்பெருக்கம் என்று சொல்லக்கூடிய, குடும்ப அமைப்பில் நிகழக்கூடிய, செயலை செய்கின்றனர். நாம் நாளமில்லா சுரப்பிகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த நாளமில்லா சுரப்பிகள் ஒவ்வொரு உறுப்புகளிலும் செயல்படும் விதம் பற்றி கடந்த இதழ்களில் நாம் அலசி ஆய்ந்திருக்கிறோம்.

inapperukka mandalam4இப்பொழுது நாம் பேசப்போவது இனப்பெருக்க மண்டலம். இந்த இனப்பெருக்க மண்டலம் என்பது மனிதனுடைய உடலில் முத்தாய்ப்பாய் இருக்கக்கூடிய அற்புதமான மண்டலம் என்பதை நாம் சொல்லலாம். நீண்ட ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பும், எழுபது வயதுக்கு பின்பும் பெண்களை புணரக்கூடாது. இளமை வயதில் வளமையில்லாத விந்தினை இரைப்பதில் கேடுண்டு. அதேபோல் முதுமையில் வறண்டுபோன விந்தினை இரைப்பதில் மிக்கக்கேடுண்டு என்று சித்தர்கள் சொல்லிய பதார்த்தகுண சிந்தாமணியில் புணர்ச்சி குறித்த வரிகள் உண்டு. அதாவது நல்ல ஆயுளை விரும்புகிறவன் பதினாறு வயதுக்கு முன்பு ஒரு பெண்ணிடம் உடலுறவில் ஈடுபடுவது தவறானது, அதனால் ஏற்படக்கூடிய உடல் விளைவுகள் பல்வேறு வகைகளில் அந்த உடலை அழிக்கக்கூடியதாக இருக்கும் என்று சித்தர்கள் சொல்கிறார்கள். அதேபோல் ஒரு ஆண் எழுபது வயதுக்கு பின்பு பெண்களை உடலுறவில் ஈடுபடக்கூடாது என்று சொல்வார்கள்.

இந்த மனித தேகத்தில் சுக்கிலம் எனப்படும் விந்து மிகவும் அருமையானது. சுக்கிலம் என்பது ஒரு ஆணுக்கு உண்டாகக்கூடிய விந்து. ஒருவருடைய முகப்பொலிவு போன்றவற்றை நிர்ணயிப்பதும் இந்த சுக்கிலம்தான். விந்துவிட்டான் நொந்துகெட்டான் என்று தமிழ் பழமொழியே சொல்வோம். ஈஸ்வர வருசம் பிறப்பதேன் இல்லாதிருந்து சாவதேன் தாதுபோயின் என்றும் ஒரு பழமொழி உண்டு. ஈஸ்வரவருடத்திற்கு பின்பு தமிழில் வரக்கூடிய வருடத்தின் பெயர் தாது. தாது ஒரு மனிதனுக்கு போய்விட்டது என்றால் ஈஸ்வரனிடம் சென்று சேரவேண்டும் என்பதை இந்த ஈஸ்வர வருடத்தையும் தாது வருடத்தையும் வைத்து நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதிலிருந்து விந்து என்பது மிகச்சிறந்த ஒரு உயிர்ப்பொருள். அதை வீணாக்கக்கூடாது, விரயம் பண்ணக்கூடாது. சமூக சுழற்சிக்கு, பரிணாம சுழற்சிக்கு தன்னுடைய வித்துக்களை இந்த உலகத்திற்கு பரிசாகக் கொடுத்து இந்த உலகத்தை மேன்மையடைய, சமூகத்தை மேன்மையடைய செய்யக்கூடிய ஒரு அற்புதமான பொருள் ஒரு ஆணின் விந்து. அந்த விந்தை ஒவ்வொரு ஆணும் திருமணத்திற்கு முன்பு பேணிப் பாதுகாக்கவேண்டும். அந்த விந்து என்பது மட்டுமே ஒரு ஆணுக்கு நல்ல முகப்பொலிவைக் கொடுக்கும், காந்த சக்தியைக் கொடுக்கும், வசீகரத்தன்மையைக் கொடுக்கும், ஜனவசியத்தைக் உண்டாக்கும்.

inapperukka mandalam3எந்த ஒரு ஆண் விந்து வளமையோடு இருக்கிறானோ அவனால் மட்டுமே யாராலும் செய்யமுடியாத காரியங்களைக்கூட செய்யமுடியும், நிர்வகிக்க முடியும், நிர்வாகத் திறனை மேம்படுத்த முடியும். நாம் நிறைகுடம் தளும்பாது, குறைகுடம் கூத்தாடும் என்று சொல்லுவோம். அதே மாதிரி விந்துவில் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தால் ஒரு மனிதன் அந்தந்த வயதிற்கேற்ற கவர்ச்சியுடனும், காந்தத்துடனும், ஈர்ப்புடனும் நல்ல வசீகரத்துடன் இருப்பான். அந்த விந்துவின் வளம் குறைகிற பொழுது ஒரு மனிதனுடைய கண்கள் உள்வாங்கி கன்னம்; குழிவிழுந்து முகம் கலையிழந்து இருபது வயதில் கூட முப்பது வயது முதிர்ந்த இளைஞன் போல் தெரியக்கூடிய ஒரு தன்மை வரும். ஆக இந்த விந்தை போசிப்பது இனப்பெருக்க மண்டலத்தைப் போசிப்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம் ஆண்கள்.

அதே மாதிரி பெண்கள், பெண்களுக்கு உண்டாவதை நாதம் என்று சொல்லுவோம். விந்தும் நாதமும் ஒன்றிணைகிற பொழுது அந்த கலவியில் விந்தும் நாதமும் ஒன்றாய் சேரக்கூடிய அந்த நேரத்தில்தான் ஒரு மிகச்சிறந்த குழந்தை என்பது உருவாகும். சித்தர்கள் எழுதிய பதார்த்த குண சிந்தாமணி என்ற நூலில் ஒரு வளமையான குழந்தை எப்பொழுது பிறக்கும் என்றால் ஒரு ஆணும் பெண்ணும் சேருகிற பொழுது வெளிப்படும் பரிசுத்தமான விந்தும், சுத்தமான நாதமும் சேர்ந்து உருவாகக்கூடிய அந்த சிசுவானது வளமையாகவும், பொலிவாகவும்,சமூகத்தில் பொறுப்புள்ளதாகவும் திகழும் என்று அந்தப் பாடலில் சித்தர்கள் சொல்வார்கள். இன்றைக்கு குறைபாடுகளோடு குழந்தைகள் பிறக்கிறது என்றால் அதற்குக் காரணம் ஆணும் பெண்ணும்தானே தவிர மரபைக் குறை சொல்லி தப்பிக்க இயலாது. சிலர் நெருங்கிய உறவில் திருமணம் செய்ததால்தான் இந்தக் குழந்தை ஊனமாகப் பிறந்தது என்று சொல்வார்கள். இல்லை, அப்படிப் பார்த்தால் நெருங்கிய சொந்தத்தில் பல லட்சம் திருமணங்கள் நடக்கிறது. ஒரு சிலருக்கு மட்டும் ஏன் குழந்தை ஊனமாகப் பிறக்கிறது என்று பார்க்கும் பொழுது சில நேரங்களில் அந்த விந்துவில் உள்ள உயிரணுக்கள் மிகக்குறைவாக இருந்திருக்கலாம், தகுதியில்லாத உயிரணுவும் – தகுதியில்லாத நாதமும் ஒன்று சேருகிற பொழுது உடல் தகுதியில்லாத குழந்தைகள் பிறப்பது இயல்பான விசயமாக இருக்கும்.

inapperukka mandalam2ஒரு ஆண் விந்தை வளப்படுத்த வேண்டும், ஒரு பெண் நாதத்தை வளப்படுத்த வேண்டும். அந்த மாதிரி வளப்படுத்துகிற பொழுதுதான் சமூக மேன்மைக்கு உரிய வகையில் மிகச்சிறந்த குழந்தைகளை உருவாக்க இயலும். விந்து ஒரு ஆண்மகனுக்கு மிகச்சிறந்த உன்னதமான பொக்கிசம். அந்த விந்தில் ஏதாவது குறை இருந்தது என்றால் அதற்கும் சித்தர்கள் ஒரு பாடலை சொல்லியிருக்கிறார்கள் கானடா தாதுகெட்டால் மனிதனல்ல

காரிகையர் தங்களுக்கு புருசனல்ல

வீனடா தாதுகெட்டால் தேகம் போச்சு

வெறுவாயை மெல்லாதே மின்னாராசை

பூனடா வென்றாலும் பூனப்போமோ

புத்தியினால் தாதுவகை அறிந்து நீயும்

தானடா தாமகி உண்டாகத்தான்

தன்மையுடன் அவ்வகையை தகவாய் பாரேன்

விந்து கெட்டால் தேகம் போச்சு என்பதை வலியுறுத்தும் பாடலிது. இன்றைய இளைஞர்கள் கண் போன போக்கில், கால் போன போக்கில் மது, புகை, போதைக்கு அடிமையாகி அளவில்லாத சொத்தாக பொக்கிசமாக இருக்கக்கூடிய விந்தை வீணடிக்கக்கூடிய செயல்களில் இறங்குகிறார்கள். அவர்களுக்கு விந்தின் மகிமை என்பது புரியவில்லை. இனியாவது இக்கட்டுரையைப் படித்தாவது புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். இனப்பெருக்க மண்டலத்தில் தொடர்புடையது பெண்களுக்கு கர்பப்பை, மார்புகள், அந்தரங்க உறுப்புகள் இவைகளில் பல்வேறுபட்ட பிரச்சனைகள் வரக்கூடிய வாய்ப்பு உண்டு. அதே மாதிரி ஆணுடைய இனப்பெருக்க மண்டலத்தில் தொடர்புடையது ஆணுறுப்பு, விதைகள் மற்றும் ஆணுக்கான உணர்வுகள் இவையெல்லாமே ஆணுக்கான தொடர்புடைய விசயங்கள், இனப்பெருக்கத்தில் வரக்கூடிய பிரச்சனைகள் இவற்றைப் பற்றி இனி வரும் கட்டுரைகளில் அறிவோம். இனி வரும் பகுதியில் விந்து, நாதம் இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய அந்த உறவுப் பாலமான திருமணம், இந்த திருமண பந்தத்தில் உண்டாகக்கூடிய முதல் உறவு அதன் அடிப்படையில் அடுத்து வரும் தலைப்பாக முதல் இரவு முதல் முதல் உறவு வரை என்ற கட்டுரையோடு மறுபடியும் நான் உங்களை சந்திக்கக் காத்திருக்கிறேன்.

நன்றி;

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667

இணைய தளம்: www.drarunchinniah.in

மருத்துவர் அருண் சின்னையாவின் சித்த மருத்துவம் தொடர்பான காணொளிகள் மற்றும் மின் புத்தகங்களைப் பெற அவரது இணையதளத்தைப் பார்க்கவும்.


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆரோக்கியம் தரக்கூடிய அறுசுவை உணவுகள் – இறுதிப் பகுதி”

அதிகம் படித்தது