மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மின் புத்தகங்கள் வாசிப்போம் Android செயலிகள்(Apps) வாயிலாக

சௌமியன் தர்மலிங்கம்

Jan 24, 2015

ebooks3அலைபேசி வாயிலாக நூல்களை வாசிக்க முடியும் என்பதையும் அந்தப் பழக்கம் தமிழகத்தில் பரவி வருகிறது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அலைபேசிகள்(Smart phones) பெரும்பாலும் இரண்டு வகை இயங்கு தளங்கள் வழியாக செயல்படுகின்றன. ஒன்று Android, மற்றொன்று IOS. தமிழகத்தில் Android வகை அலைபேசிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை அலைபேசிகளில் ஏராளமான செயலிகள்(Apps) உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.

தற்போது பல்வேறு தமிழ் நூல்கள் செயலிகளுள் பொதியப்பட்டு play.google.com என்ற தளத்தில் கிடைக்கின்றன. அவற்றுள் சில முக்கியமான நூல்களையும் அவற்றைப் பெறுவதற்கான இணைய சுட்டிகளையும் கீழே தொகுத்துள்ளோம். இவற்றை இணைய இணைப்பு கொண்ட அலைபேசியிலிருந்து நேரடியாக தரவிறக்கி வாசிக்க ஆரம்பிக்கலாம். தரவிறக்கம் செய்யும் பொழுது மட்டும் இணைய இணைப்பு இருந்தால் போதும். அதன் பிறகு விரும்பும் நேரத்தில் புத்தகத்தை வாசிப்பது போலவே இவற்றையும் வாசிக்கலாம். நீங்கள் பயணம் செய்யும் பொழுதோ, காத்திருக்கும் நேரங்களிலோ, உறங்குவதற்கு முன்போ அலைபேசியில் உள்ள இந்த நூல் செயலிகளை படித்து மகிழலாம்.

ebooks2

-தொடரும்

இதன் தொடர்ச்சியைக் காண http://siragu.com/?p=16374 என்ற இணைப்பை சொடுக்கவும்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மின் புத்தகங்கள் வாசிப்போம் Android செயலிகள்(Apps) வாயிலாக”

அதிகம் படித்தது