மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 55

கி.ஆறுமுகம்

Apr 4, 2015

bose12குழு: நீங்கள் மேலும் ஏதாவது விவரங்களை சேகரிக்க முயற்சி செய்தீர்களா?

சின்கா: ஆம் மீண்டும் நான் நேருவை 16, 1951ல் பாரீசில் நடந்த வெளியுறவு கூட்டத்தில் சந்தித்து பேசினேன்.

(சின்கா: நான் இதனை ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தேன். நான் சில வேலைகளுக்காக அந்தக் கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருந்தேன். நான் ராதாகிருஷ்ணனிடம் கூறியதும், ராதாகிருஷ்ணன் “இது உனக்கு சம்பந்தமில்லாத வேலை, இது உனக்கு வேண்டாம் என்றார்.

சின்கா: ஏன்?

ராதாகிருஷ்ணன்: இதனால் உனது வாழ்க்கை பாதிக்கப்படும்.

என்று சின்காவை எச்சரித்தார்.)

குழு: சின்கா, இதனை உங்களால் உலகத்திற்கு நிரூபிக்க முடியுமா?

சின்கா: இதனை அரசாங்கம் நம்ப மறுக்கிறது மற்றும் நான் நேருவிடம் நீங்கள் அடுத்த முறை போசை இந்தியாவிற்கு அழைக்க ஏற்பாடு செய்யமுடியும் அல்லவா. இந்தியாவும் ரசியாவும் நல்ல நண்பர்கள் தானே, எனது சீன அதிகாரி நண்பர்கள்கூட, நேருவினால் மட்டுமே மீண்டும் போசை கொண்டு வரமுடியும் என்று தெரிவித்தனர்.

சின்கா: நான் ரசியா நாட்டின் மூலம் பார்த்தேன். அதில் போசின் மரணம் நிறுத்தப்பட்டு உள்ளது என்று இருந்தது. மேலும் அதில் உள்ள சில விவரங்கள்..

நாங்கள் அதனைக் கேட்க வேண்டியதில்லை, ரசியாவின் கோப்பு விவரங்கள் எங்களுக்கு வேண்டாம் என்றனர் முதல் குழு.

subash6சின்கா: மீண்டும் நான் போசு இறந்ததாகக் கூறப்படும் விமான தளத்தினை புகைப்படம் எடுத்தேன். சுமார் 30 புகைப்படம் எடுத்தேன். அதில் சிலவற்றை விசாரணைக் குழுவிடம் காண்பித்தேன். அதனை அவர்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. நான் எடுத்த புகைப்படத்தில் keelung என்ற ஆறு புகைப்படத்தில் பதிவாகவில்லை, ஏனெனில் அந்த விபத்தின் எல்லைக்குள் அது இல்லை. ஆனால் விபத்து உண்மை எனக் கூறப்படும் புகைப்படத்தில் ஆறு வந்துள்ளது. இதனைக் கொண்டு பார்க்கும் போது அந்தப் புகைப்படம் போலியாக சோடிக்கப்பட்டவை என்பது தெரிகிறது. மீண்டும் முதல் விசாரணைக் குழுவான நாவசுகான் குழு 10/misc/INA Allied Secret Report என்ற எண்ணைக் கொண்ட கோப்புகளை ஆராயவில்லை.

என்றும் தெரிவித்தார்.

பின்னர் நேருவின் அலுவலகத்தில் பணிபுரிந்த ஷாம்லால் ஜெயின் என்பவர் இந்த ஜி.டி.கோசலா குழு முன் சில விவரங்களைக் கூறினார். அது நேரு பிரிட்டனுக்கு அனுப்பிய கடிதத்தைப் பற்றிய விவரங்கள், அது பின்வருமாறு.

Jawaharlal Nehru’s letter to Mr.Attlee:

Dear Mr.Attlee,

                I understand from a reliable source that Subhas Chandra Bose, your war criminal, has been allowed to enter Russian territory by Stalin. This is a clear treachery and betrayal of faith by the Russians. As Russia has been an ally of the British – Americans, it should not have been done. Please take note of it and do what you consider proper and fit.

                                                                                                                                Yours Sincerely,

                                                                                                                                Jawaharlal Nehru.

இதுதான் அந்த கடிதம். இதனை அவர் விசாரணை குழுவிடம் தெரிவித்தார்.

subashu2இரண்டாவதாக அமைத்த ஜி.டி.கோசலா விசாரணைக் குழுவும் அனைத்து சாட்சிகளையும், கோப்புகளையும் முழுமையாக ஆராய்ந்து தனது அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன் அறிக்கையில் போசு விமான விபத்தில் உயிர் இழந்தார் என்று அறிக்கையின் முடிவு இருந்தது. இந்த இரண்டு விசாரணைக் குழுவையும் அமைத்தது காங்கிரசு அரசு. இந்தக் குழுவை அமைத்த, நேரு மற்றும் அவரது மகள் இந்திராகாந்தியின் நோக்கம் உண்மையாகவே போசின் மரணத்தில் உள்ள மர்மங்களைக் கண்டறிய வேண்டும் என்பது அல்ல, போசின் மரணத்தைப் பற்றி மக்களிடம் எழுந்திருந்த ஐயங்களையும், மக்கள் போசு இறந்து விட்டார் என்று நம்பும்படி செய்வதற்காக வேண்டியே இந்த விசாரணைக் குழுக்கள் செயல்பட்டது.

இரண்டாவது குழு போசின் மர்மங்களைக் கண்டுபிடிப்பதற்கு பதில், அவரைப் பற்றிய உண்மைகளை எவ்வாறு மறைப்பது என்று மிகத் தீவிரமாக செயல்பட்டது. அதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் கையாண்டுள்ளது. இந்த இரண்டு விசாரணைக் குழுக்களும் போசு விமான விபத்தில் இறந்துவிட்டார் என்ற அறிக்கையை இந்திய அரசிடம் சமர்ப்பித்திருந்த இறுதி முடிவுகளாக இருந்தது. ஆனால் இந்திய மக்கள் இந்த அறிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை, போசின் இறப்பில் இருந்த மர்மங்களைப் பற்றிய மக்களின் பேச்சு சிறிதும் குறையவில்லை. இது மீண்டும் அரசுக்கு நெருக்கடியாகவே அமைந்தது. போசின் மர்மங்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் தெரிந்தவர்கள் நேரு மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்ததும் நேருவின் அமைச்சரவையில் இரயில்வே துறையின் அமைச்சராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி. நேரு மற்றும் லால்பகதூர் சாஸ்திரி அவர்களும் போசு ரசியாவில் இருந்ததை நன்றாக அறிவார்கள்.

subashu1லால்பகதூர் சாஸ்திரி, நேரு இறந்த பிறகு இந்தியாவின் இரண்டாவது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசு கட்சியின் இரண்டாவது பிரதமராக பதவி ஏற்றபோது இந்தியா-பாகிஸ்தான் போர் 1965ல் தொடங்கியது. அந்தப் போரில் இந்திய தேசிய இராணுவத்திற்கு ‘Jai Jawan Jai Kisan’ என்ற வாசகத்தைக் கொடுத்து போரினை நடத்தினார். இவர் 1966ல் (Tashkent Agreement) ஒப்பந்தத்திற்காக ரசியாவிற்குச் சென்றார். அங்கு இவர் Tashkent ஒப்பந்தத்தினை பார்த்துவிட்டு நான் கையெழுத்திட மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்தார். இது எனது நாட்டு மக்களை பாதிக்கும் என்றார். ஆனால் ரசியா அரசு நீங்கள் கையொப்பம் இட வேண்டும் என்று எச்சரித்தது. ரசியா, ஆசிய கண்டத்தில் நடந்த பனிப்போரில் தனது செல்வாக்கை நிலை நிறுத்துவதற்காக தீவிரமாக செயல்பட்டது. ஆனால் லால்பகதூர் சாஸ்திரி ரசியாவிடம் நான் கையொப்பம் இடுகிறேன், ஆனால் நீங்கள் எனக்கு போசை காண்பிக்க வேண்டும் என்றார். அதற்கு ரசிய அரசு சிறிது தயங்கியது, பிறகு ஒப்புக்கொண்டது.

பின் போசு இருந்த சிறைச்சாலைக்கு லால்பகதூர் சாஸ்திரியை அழைத்துச் சென்றனர். அங்கு போசைக் கண்டதும் அவர் இருந்த நிலையைக் கண்டு மிகவும் வருந்தினார். போசிடம், “நீங்கள் இந்தியா வந்துவிடுங்கள்” என்றதும், போசு அவரின் வார்த்தைகளை நம்பவில்லை, பின்னர் நான் என் மனைவியிடம் கூறுவேன் என்றார். அதற்கு போசு, என்ன கூறுவீர்கள் என்று வினவினார்?. நான் என் நாட்டின் தலைவனை சந்தித்தேன், அவர் அங்கு துன்பத்தில் உள்ளார் என்பேன் என்றார். போசு மௌனமாக இருந்தார், பின் பேசினார். இருவரின் சந்திப்பும் முடிந்தது. லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டார். பின் இரவு தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினார். அன்று இரவு அவர் அறையில் உறங்கினார், உறங்கியவர் காலையில் எழுந்திருக்கவில்லை. இரவிலேயே மர்மமான முறையில் இறந்திருந்தார். இன்றும்கூட லால்பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் இறந்தார் என்று கூறப்படுகிறதே தவிர, முழுமையாக அவர் மரணத்தைப் பற்றி அறிய முடியவில்லை. போசைப் பார்த்த அன்று இரவு இவர் இறந்தார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசின் வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 55”

அதிகம் படித்தது