மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உடல் எடையைக் குறைக்க சில குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

May 30, 2015

udal paruman3

  1. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்வெதுவெதுப்பான வெந்நீரில் ஒன்றில் பாதி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரைதேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
  2. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவில் தாராளமாக வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு.
  3. வெதுவெதுப்பான வெந்நீரில் தேன் கலந்துஅருந்தினால் உடல் பருமன் குறையும்.
  4. கொட்டை நீக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்துதினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
  5. பாலில் இஞ்சி சாறு கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்புஇளைக்கும்.
  6. சிறிது சீரகத்தை மஞ்சள் வாழைப் பழத்துடன்சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் எடை குறையும்.
  7. தேனுடன் ஆமணக்கு வேரை இடித்து கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில்ஊறவைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச்சதை குறையும்.
  8. அருகம்புல்லைசாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.
  9. இரண்டுதேக்கரண்டி முருங்கை இலைச்சாற்றை தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டுவந்தால் உடல் எடை குறையும்.
  10. கொள்ளுப்பயிரை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து கல் உப்பு கலந்துதினமும் மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
  11. தேனுடன் ஓமத்தைகருக வறுத்துப் பொடி செய்து கலந்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.
  12. கேரட்டுடன் தேன்சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
  13. தினமும் பாசி பருப்புடன் கரிசலாங்கண்ணிஇலையைசேர்த்து சமைத்து சாப்பிட உடல் எடை குறையும்.
  14. சோம்பை சிறிது தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடைகுறையும்.
  15. பாதாம் பொடியுடன் சிறிது தேன் கலந்து காலை உணவிற்குப் பிறகு சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.
  16. நெல்லிக்காய்,கடுக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்துகாலையில் குடித்தால் உடல் எடை குறையும்.
  17. அவரைஇலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால்எடை குறையும்.
  18. அமுக்கராவேர், பெருஞ்சீரகம் இவற்றை பாலுடன் காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும்.
  19. ஆவாரைஇலையை நிழலில் உலர்த்தி இடித்து தூளாக்கி துணியில் சலித்து வைத்துக் கொண்டுதேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
  20. சிறிதளவுமோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால்உடல் இளைக்கும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடல் எடையைக் குறைக்க சில குறிப்புகள்”

அதிகம் படித்தது