மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரஸ்புடீன்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 20, 2021

siragu rasputin1
ரஸ்புடீன் ரஷ்ய நாட்டை ஆட்டிப்படைத்த ஒரு சாமியார் நானே ஆண்டவன் என ரஷ்ய நாட்டின் அன்றைய அரசன் நிக்கலோஸ் 2 மற்றும் அவன் மனைவி அலெக்சாண்டரா ஆகியோர் தன் கட்டுக்குள் வைத்திருந்தவன். நிக்கலோஸ் 2க்கு அலெக்சி எனும் ஒரு மகன் இருந்தான், அவனுக்குக் குருதி உறைதல் ஏற்படாத ஒரு மரபணு நோய் இருந்தது, அதன் வலியிலிருந்து குழந்தையைக் காப்பாற்றுவதாகக் கூறி அரண்மனைக்குள் நுழைந்தான். அவனுக்கு ஹிப்னாடிசம் தெரிந்திருந்தது. குழந்தையைத் தூங்க வைத்து அதன் வலியிலிருந்து அதற்கு ஆறுதல் அளித்த காரணத்தால் அரசி ரஸ்புடீன் சொல்லை மறுத்துப் பேச யாரையும் அனுமதித்தது இல்லை.

இவன் அரண்மனையில் செலுத்தும் ஆதிக்கத்தைப் பார்த்து பிரபுக்கள் கூட்டத்திற்கு ஆத்திரம். எப்படியாவது இவனை ஒழித்துவிட எண்ணினார்கள்.

முதலாம் உலகப் போரின்போது நிக்கோலஸ் 2 ஜெர்மனிக்கு எதிராகப் படைகளை நடத்திச் சென்றபோது அதைப் பயன்படுத்தி அலெக்சாண்டரா மூலம் தனக்கு வேண்டியவர்களை அரசு பதவிகளில் ரஸ்புடீன் நுழைத்ததால் இனியும் அவனை விட்டுவைக்கக் கூடாது எனப் பிரபுக்கள் எண்ணினர். அலெக்சாண்டராவோடு ரஸ்புடீனுக்கு உறவு இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

ரஸ்பூடினை எப்படிக் கொல்வது எனப் பிரபுக்கள் திட்டம் தீட்டினர். பல முறை கொல்ல முயன்றனர். அந்த முயற்சியில் தோல்வி அடைந்தவர்கள் இறுதியாக 1916 டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி வெற்றி அடைந்தனர்.

Prince Felix Yussupov,   Grand Duke Dimitri இருவரும் கொலையில் முக்கிய பங்கு வகித்தனர்.

யுசுபோவ்வின் அரண்மனைக்கு தன் மனைவியைச் சந்திக்க வருமாறு யுசுபோவ் ரஸ்புடீனுக்கு கடிதம் அனுப்பினான். பெண்களோடு மகிழ்வாக இருப்பதில் நாட்டம் கொண்ட ரஸ்புடின் கடிதம் பார்த்தவுடன் யுசுபோவ் அரண்மனைக்கு ஆர்வத்தோடு சென்றான்.

அங்கே ரஸ்புடீனுக்கு கேக்கில் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆனால் நஞ்சு உண்ட ரஸ்புடீன் மரணிக்காதது கண்டு குழப்பமடைந்த யுசுபோவ், மாடியில் இருக்கும் டிமிட்ரி மற்றும் கூட்டாளிகளோடு கலந்தாலோசித்தான், பிறகு மீண்டும் கீழே வந்தவன் தன் துவக்கியால் ரஸ்புடீனை சுட்டான்; மூன்று குண்டுகள் அவன் மீது சுடப்பட்டதாகக் கூறப்படுகின்றது; ஒன்று தலையை குறிபார்த்தும், இரண்டாவதும் மூன்றாவதும் வயிற்றுப் பகுதியிலும் சுடப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அவன் அப்போதும் இறக்கவில்லை என்பதால் அவனை ஆற்றில் கொண்டு சென்று வீசிவருமாறு உத்தரவு இடப்பட்டது.

அவன் மரணம் நிகழ்ந்ததைப் பற்றிப் பல கதைகள் இருக்கின்றன. அவன் நீரில் மூழ்கி இறந்ததாக நம்பப்பட்டாலும் அவன் இறந்த பிறகு நடந்த உடற்கூராய்வில் அவன் நுரையீரலில் தண்ணீர் இல்லை, எனவே இறந்த பிறகே அவன் ஆற்றில் வீசப்பட்டிருக்கிறான் என்று கூறப்படுகிறது.
அவனுக்குக் கொன்ற யுசுபோவ், டிமிட்ரி இருவரும் பிரபுக்கள் என்பதால் மரண தண்டனை வழங்கப்படாமல் நாடு கடத்தப்பட்டனர்.

இந்த மரணம் அடுத்து அரச குடும்பத்தை வீழ்த்த எண்ணிய புரட்சியாளர்களுக்குத் தகுந்த வாய்ப்பு அமைந்தது. பிப் மற்றும் அக்டோபர் புரட்சி ரஷ்ய வரலாறு முக்கியமான ஒன்று, ரஸ்புடீன் மரணம் புரட்சியைத் தீவிரப்படுத்தியது என்றால் மிகையல்ல.

Alexander Kerensky ரஸ்புடீன் இல்லாமல் லெனின் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த கொலை ரஷ்ய வரலாற்றை திருப்பி போட்டது, “Without Rasputin there would have been no Lenin.”

ரஸ்புடீன் மரணம் பிறகு அந்த கொலையை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வெளிவந்தன. முக்கியமாக 1970 ஆம் ஆண்டு Boney M வெளியிட்ட பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது, அதில் They put some poison into his wine…He drank it all and said, ‘I feel fine.’” போன்ற வரிகள் ரஸ்புடீன் கொலை பற்றி விவரித்தது.

இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ரஸ்புடீன் என்ற வரலாற்று நாடகத்தை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரஸ்புடீன்”

அதிகம் படித்தது