மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவலைகளைக் களைவோம்!

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Apr 16, 2016

kavalaigalai24+4 = 8

1+7 = 8

5+3 = 8

ஆக ஒரே விடைக்கு இத்தனை கூட்டு விதி முறைகள் உள்ளது. இதில் எவருக்கும் சந்தேகம் கிடையாது. நம்பினால் நம்புங்கள் இது போலத் தான் வாழ்க்கையும், ஒவ்வொருவருக்கும் ஒரு மாதிரியான சூழ்நிலையும் அமைப்பும்.

என்ன ஒவ்வொரு வேளையும், சூழ்நிலை மாறுமே தவிர வாழ்க்கை மாறாது.பிடித்தோ பிடிக்காமலோ தெரிந்தோ தெரியாமலோ தனக்கு வேண்டிய ஒன்றை வாழ்க்கைநம்மைக் கருவியாய்க் கொண்டு நிகழ்த்திக்கொண்டு தான் இருக்கும்.

ஆகப்பெரும் மகிழ்ச்சியிலும் ஒன்றும் நேரப்போவதில்லை, பெரும்துன்பத்திலும் ஒன்றும் நேரப்போவதில்லை. அது ஏற்ற இறக்கங்கள் தான். ஆனால்ம னித மனம் வேடிக்கையான ஒன்று, இன்பமோ துன்பமோ அது இரண்டைப் பற்றி மட்டுமே நினைத்து கவலை அடைகின்றது.

  1. இன்பத்தில்-எப்பொழுது துன்பம் வருமோஎன்று!
  2. துன்பத்தில்- மகிழ்ச்சி இல்லையே என்று!

இப்படி மாற்றாக நினைத்து அந்த அந்த வேளைகளில் கிடைக்கும் சொற்ப ஆனந்தத்தையும் தவறவிட்டுவிடுகிறார்கள். இன்பம் கிடைக்கிறதா உற்றவரோடு  அனுபவித்துச் சிரியுங்கள். துன்பம் கிடைக்கிறதா ஒரு பெருமூச்சுடன் உரியவரிடம் கூறி அழுதுவிடுங்கள்.

இந்த இரண்டு செயல்களைச் செய்யும் பொழுதும் உங்கள் மன அழுத்தம் நிச்சயம் குறைந்திருக்கும். உற்சாகம் என்பதை நமக்குள் உருவாக்கினால் மட்டுமே உண்டு. எங்கும் அதைப் பெறமுடியாது, அன்றாட வாழ்வில் முகமலர்வோடு இருந்தால் அன்றைக்குப் பொழுதில் உங்களின் செயலால் பெரிய துன்பம் வந்திருக்காது. முடிந்தால் பிறருக்கு நீங்கள் நேர்மறையான சிந்தனை மூலம் கொடுத்து உதவலாம்.

நேர்மறை சிந்தனை என்பதை பல ஆயிரம் கோடியை விட மேலானது என்பேன். அது எப்படி என்றால், நல்லெண்ண ஆதிக்கக் குழம்பைப் போன்றது. இங்கே நான் ஏன் ஆதிக்கக் குழம்பு என்று கூறியுள்ளேன்? என்ற கேள்வி உங்கள் மனத்தே எழுந்திருக்கக்கூடும்.

நல்லெண்ணத்திற்கு தீய எண்ணங்களை விடவும் ஆதிக்க சக்தி அதிகம். மனதிலுள்ள தீய எண்ணங்களைக் குறைக்க நல்ல எண்ணங்களைத் தூவிக் கொண்டே வந்தால் போதும். அது செழித்து வளர்ந்து நல்லதையே ஆயிரம் மடங்கென விளைய வைக்கும். ஏனென்றால் தீய எண்ணம் காடளவு இருந்தாலும் ஒரு பொறி நல்லெண்ணம் பட்டுவிட்டால் போதும்! தீய எண்ணங்கள் சாம்பலாகும் வரை நல்லெண்ணங்கள் ஓயாது.

தினமும் சிறிதளவு நேரத்தை மனதிற்கென்று ஒதுக்குங்கள். உடலில் கோளாறு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி வெளிக்காயத்தை ஆற்றிவிடலாம். மனக்காயத்தை ஆற்ற நீங்கள் முன் வந்தால் அன்றி யாருக்கும் தெரியாது. உங்கள் கையில் கீறல் இருந்தால் மற்றவர் கண்களால் பார்க்கமுடியும். உங்கள் மனதில் சஞ்சலம் இருந்தால் நீங்கள் சொன்னாலொழிய யாராலும் அதைப் பார்க்க முடியாது.

உங்கள் மனதுடன் பேசி உங்கள்  பிரச்சனைகளை ஆராயத் தெரியாவிட்டால் விட்டு விடுங்கள், அதற்கு பதில் வேறொரு மனதிடம் பேசுங்கள். அது உங்களுக்கு நெருக்கமான தோழியோ, தோழனோ, தாய் தந்தையோ, தெரிந்தவரோ, அவர் எப்படிப் பட்டவர் என்றால் “இவரிடம் பேசினால் மனச்சுமை குறையும்” என்று உங்களிடம் ஒரு நெருக்கத்தையும் நம்பிக்கையும் ஏற்படுத்திய அந்த நபரின் மனதோடு உறவாடுங்கள். உங்கள் கவலைகள் யாவும் காற்றோடு காற்றாய் மாயமாய் மறைந்து விடும்.


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவலைகளைக் களைவோம்!”

அதிகம் படித்தது