மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை

பிரத்யுக்ஷா பிரஜோத்

May 21, 2016

nota3

NOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எந்த கட்சிக்கோ வாக்காளருக்கோ வாக்களிக்க விரும்பாவிடில் தன்விருப்பமின்மையை தெரிவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது இந்த நோட்டா என்னும் தேர்வு.

2009ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, 2013ம் ஆண்டு முதல் வாக்கு எந்திரத்தில் சேர்க்கப்பட்டது.

நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் வாக்காளர் பட்டியலை மாற்றவோ, மீண்டும் இடைத் தேர்தல் நடத்தவோ செய்யலாம். தற்போது இந்திய அரசியல் சட்டம் இப்படி எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்பது வருத்தத்தைத் தருகிறது.

ஒரு தொகுதியில் ஆயிரம் வாக்குகள் இருந்து அவற்றில் 999 வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்திருந்தாலும், ஒரு வாக்கு கிடைத்த வேட்பாளர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இத்தொகுதியில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் யார் மீதும் எனக்கு நம்பிக்கையில்லை என்பதை தெரிவிப்பதற்காக நோட்டாவை பயன்படுத்தலாம். இப்படிப்பட்ட வாக்குகள் அதிகரிப்பது மக்களின் அதிருப்தியை தெரியப்படுத்த உதவும். அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கவனம் கொள்வர். அரசியல்வாதிகள் தங்களை தகுதியானவர்களாக்கிக் கொள்ள முயற்சி மேற்கொள்வர்.

nota2மேற்கூறியவை அனைத்தும் வெறும் நம்பிக்கை கூற்றுகள் மட்டுமே. நோட்டாவிற்கு வாக்களிப்பதன் மூலம், கள்ள வாக்குகள் பதிவாகாமல் தவிர்க்கலாம். இது ஒன்று தான் நோட்டாவின் தற்போதைய பயன்.

வாக்களிக்காமல் இருப்பதற்கும், நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லைஎன்று வாக்களிப்பதற்கும் பெரியளவில் வித்தியாசம் தென்படவில்லை.

இந்த ஏமாற்றமே இந்த இடைத் தேர்தலில் சென்னையில் குறைந்த சதவிகித வாக்குகள் பதிவாவதற்குக் காரணமாக இருக்கலாம்.

தேர்தலை புறக்கணித்த அத்தனை தமிழக மக்களும் நோட்டாவிற்கு வாக்களித்திருந்தாலும் தேர்தல் முடிவுகள் மாறியிருக்காது என்பது வேதனைப்பட வைக்கும் உண்மை.

பொது மக்கள் எல்லோருமே நோட்டாவிற்கு வாக்களித்திருந்தாலும், மீதம் பதிவாகும் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வாக்குகளின்படி தமிழக முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்.

இந்நிலை மாறினாலொழிய நோட்டா என்பதை வாக்கு எந்திரத்தில் அறிமுகப்படுத்தி எந்த பலனும் இல்லை. அது வெறும் ஒரு மாற்றுத் தேர்வாகவே இடம் பெரும்.


பிரத்யுக்ஷா பிரஜோத்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை”

அதிகம் படித்தது