கர்நாடகா, தமிழகத்துக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு
Sep 28, 2016
நேற்று(27.09.16)உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூடியது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடந்த இந்த அனைத்துக்கட்சி கூட்டம், தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்று முடிவெடுத்துள்ளது.
மேலும் மத்திய அரசுடனான இரு மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படுவதால் நாளை தமிழத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது பற்றியான தீர்மானம் கொண்டுவரப்படும். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா டில்லி செல்கிறார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கர்நாடகா, தமிழகத்துக்கு தண்ணீர் தர மீண்டும் மறுப்பு”