காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி
Nov 16, 2016
காஷ்மீரில் உள்ள ஜலூரா என்ற வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையொட்டி பாதுகாப்பு படையினரும் போலீசாரும் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.
அச்சமயம் பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் பயங்கரவாதிகள் நோக்கி தாக்குதல் நடத்தினர். அதில் போலீசார் ஒருவர் பலியானார். அப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி”