மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்திலிருந்து ரூ.10000 முன்பணம்
Nov 21, 2016
கடந்த நவம்பர் 8ம் தேதியிலிருந்து 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து மக்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி மத்திய அரசின் குரூப்-சி ஊழியர்கள் தங்களது ஊதியத்திலிருந்து ரூ.10000 ஐ முன்பணமாக அலுவகங்களில் ரொக்கமாகப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. எனவே மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு ரொக்கமாக முன்பணம் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கிகளிலிருந்து ரூ. 10 கோடி கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டை வாபஸ் பெற்றதிலிருந்து நாங்கள் சிரமப்பட்டு வந்துள்ளோம். பணத்தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10000ஐ முன்பணமாக நவம்பர் 21 முதல் நவம்பர் 23 வரை அலுவகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது என ரயில்வே ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்திலிருந்து ரூ.10000 முன்பணம்”