மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய புயலால் தமிழகத்துக்கு மழை வர வாய்ப்பு



Dec 3, 2016

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான நாடா புயலால் பெரிய சேதம் ஏற்படுத்தாமல் கடந்த இரு நாட்களாக பரவலாக மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போன சூழலில் இம்மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

siragu-rain

இந்நிலையில் மலேசிய தீப கற்ப பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது படிப்படியாக வலுவடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும். இந்த புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக மாறி ஒடிசாவுக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. புயல் தமிழக கடற்கரை நோக்கி வரவில்லை என்றால் வறண்ட வானிலேயே நிலவும் எனவும் தெரிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அந்தமான் கடல் பகுதியில் உருவான புதிய புயலால் தமிழகத்துக்கு மழை வர வாய்ப்பு”

அதிகம் படித்தது