மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்கள்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Dec 10, 2016

Idea

நம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான் நிகழக்கூடியது. இருந்தபோதிலும் மனித மனம் எப்பொழுதும் நேர்மறையாகவே நினைத்துக் கொண்டிருப்பதுவே கிடையாது. எப்பொழுதும் “நெகட்டிவ்” என்று சொல்லப்படும் எதிர்மறை எண்ணங்களைத் தான் அதிகமாக மனம் நினைத்துக் கொண்டும் சிந்தித்துக் கொண்டும் இருக்கிறது. இப்படி நம் மனம் எதை எதிர்பார்க்கிறதோ அதையே தான் வாசலில் ஆரத்தி கரைத்து எதிர்பார்த்துக் கொண்டுமிருக்கும். இப்படித்தான் குப்பைகளான எண்ணங்கள் நம்முள் நுழையும், பிறகு அவை எண்ணங்களின் குப்பைகளாக உருவெடுக்கும். சிலர் இதற்கு விதி விலக்காக இருப்பார்கள், அவர்களுக்கு இயற்கையாகவே நேர்மறையும் நம்பிக்கை எண்ணமும் மேலோங்கி இருக்கும். அப்படி இல்லாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை ஏனென்றால் நீங்களும் அவ்வாறு மாறமுடியும்.

எதிர்மறை எண்ணங்களோ நேர்மறை எண்ணங்களோ அவற்றை நினைக்கும் பொழுது நம்மால் எளிதாக உணரமுடியும் அல்லாவா இந்த உணர்வை வைத்துத்தான் நாம் அதை மாற்றவே போகின்றோம். இது எனது நண்பர் எனக்குக் கற்றுக்கொடுத்த ஒன்று, இதைத்தான் நான் என் வாழ்வில் பயன்படுத்தி வெற்றியும் கண்டிருக்கின்றேன். ஆனால் நான் ஓரிரு நாட்களிலேயே இப்படி ஆகிவிடவில்லை, தினமும் திரும்பத் திரும்ப செய்து பார்த்தது தான் இவ்விளைவிற்குக் காரணம். “அட போதுமய்யா பீடிகை! கூறிவிடுங்கள் ” என்று நீங்கள் அங்கே சொல்வது என் காதில் விழுகின்றது சற்றே பொறுமையுடன் இருங்கள். ஏனென்றால் அது சற்றே இலகுவான ஒரு வேடிக்கையான செயல்முறைதான், எனவே அதை நேரடியாய் நான் உங்களுக்கு எடுத்த எடுப்பிலேயே கூறிவிட்டால் அதன் மீதிருக்கும் மதிப்பை நீங்கள் இழக்க நேரிடும்.

Siragu positive thinking2

பசித்துச் சாப்பிடுகின்ற பொழுது தான் உணவு ருசிக்கும், தாகம் ஏற்பட்டு அருந்தும் பொழுது தான் சுவையில்லாத தண்ணீரும் சுவை மிகும், இது போலத் தான் எல்லாமே.நமக்குப் தேவையுரும் பொழுது செய்யப்படுகின்ற ஒவ்வொரு செயலும் நமக்குப் பிடித்தே நமக்கு கிளர்ச்சியை ஊட்டி அதை நம்மோடு நிலைத்திருக்கச் செய்கின்றன. எடுத்துக்காட்டாக சோகப் படங்களை அல்லது பாடல்களை நாம் மகிழ்வாய் இருக்கும் பொழுது கேட்டுவிட்டோமேயானால் சோகப்பான்மை தொற்றிக்கொண்டு, எதையோ எப்பொழுதோ இழந்ததை நினைத்து ஒப்பாரி வைக்கச் சொல்லும். இதெல்லாம் நீங்கள் செய்வதில்லை உங்கள் எண்ணம் தான், ஏனென்றால் யாரைக்கேட்டாலும் மகிழ்வாய் இருக்கவேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால் அதைச் செய்வதற்குத் தான் எந்தவொரு அசைவும் செய்யாமல் நடப்பதெல்லாம் விதி என்று வருமான இருப்பது. துன்பம் கூட நாம் முயன்று தோற்றால் தான் கிடைக்கும் என்பது ஊரறிந்த உண்மை. இதில் ஆனந்தம் என்ன விதிவிலக்கா!

இன்றிலிருந்து உங்களுக்கு இவ்வித எந்தக் கவலையும் தேவையில்லை, ஏனென்றால் இவ்வித எதிர்மறைக் கவலைகளில் இருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கப் போகிறது. ஆம் அதைத் தான் நீங்கள் இன்றிலிருந்து செய்து பார்க்கப் போகிறீர்கள். அது இதுதான் , உங்களுக்கு எப்பொழுதெல்லாம் எதிர்மறை சிந்தனை வருகிறதோ அதை வேடிக்கையான சொற்கள் கொண்டு உங்களை விட்டே ஓடவைக்கலாம். உதாரணமாக லேசாக குளிர்கிறது என்றால் காய்ச்சல் வந்துவிடுமோ என்று நினைப்பு வரும், அப்படியொரு நினைப்பு வருகையில் ஜிங் லிங்க் என்று சொல்லுங்கள், டிஸ்கியும் என்றோ உங்களுக்குத் தெரிந்த வேடிக்கையான வார்த்தைகளைக் கையாளுங்கள். ஆனால் இப்படிச் செய்வதில் மட்டும் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். எவ்வித எதிர்மறை எண்ணங்களையும் உல் நுழைய விட்டால் மனது அதிலே சுகம் கண்டு எதார்தத்தைச் சீரழித்துப் பாழ் படுத்திவிடும். ஆக இவ்வாறன எதிர்மறை சிந்தனைகள் எழும்பொழுது சில வேடிக்கையான சொற்களை சொல்லிச் சொல்லி இதை ஒரு பழக்கமாக மாற்றிக் கொள்ளுங்கள் அது போதும், உங்கள் வாழ்கையே மாறிவிடும்.

Siragu positive thinking3எவ்வொரு செயலும் தொடர்ச்சியின் விளைவாகத் தான் பழக்கமாகும், குறிப்பாக 21 நாட்கள் தொடர்ந்து செய்யும் எந்தவொரு செயலும் பழக்கமாகும் என்பது நாமறிந்த உண்மையே. ஆனால் அந்த இருப்பத்தியொரு நாட்களும் எவ்விதச் செயலைச் செய்வதாக இருந்தாலும் அதில் சமரசம் செய்து கொள்ளாமல் பின்வாங்கும் நடவடிக்கையைக் கையில் எடுக்காமல் இருக்கவேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முடியும். ஏனென்றால் அதை நான் உணர்ந்திருக்கின்றேன், சில விசயங்களை எவ்வளவு தான் கோர்வையாக எழுதினாலும் அதன் தன்மையை அனுபவிப்பது போன்றே விவரிக்க முடியாது உணரத்தான் முடியும். நம்மில் சிலர் இரண்டு நிமிடத்தில் தயாராகும் மேகி வாழ்வைத் தான் வாழ ஆசைப்படுகிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் அதிலும்கூட இரண்டு நிமிடத்தில் மேகி கிடைத்துவிடாது, அதற்கு முன்பே சில நிமிடங்கள் நீரை நன்கு கொதிக்கவைத்தால் தான் அந்த இரண்டு நிமிடம் உணவு துரிதமாக கிடைக்க முடியும்.

எவ்வொரு செயலும் உடனே நிகழ்ந்துவிடுவது கற்பனையில் கூட நிகழாது, ஏனென்றால் அதற்குக் கூட சிறுகச் சிறுகக் கற்பனா சக்தியை வளர்த்தால் தான் சாத்தியம். ஆகவே எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், அது தான் நிரந்தரம்! அது தான் மாற்றுத் துன்பத்தை வரவழைக்காதது. துன்பத்தைத் தரக்கூடியவற்றை, அது மனிதர்களோ, செயலோ, எதுவோ! அதை விட்டு விலகியிருப்பதும் அதே வேளையில் இதைச் செய்தால் நான் நன்றாக உணர்வேன், நான் எப்பொழுதும் என்னைப் புதுப்பித்துக் கொண்டிருப்பேன்! என்று நீங்கள் உணர்ந்தால் அதைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டும் இந்த ஜிங் லிங்கைப் போல் ஏதோவொன்றைப் பயன்படுத்திக் கொண்டும் இருப்பீர்களானால் உங்கள் வாழ்வின் நேர்மறைக் கதவுகள் முழுவதும் உங்கள் முயற்சியால் திறக்கப்பட்டுவிடும்.

 நன்றி

 வாழ்க வளமுடன்


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதிர்மறை எண்ணங்களை விரட்டுங்கள்”

அதிகம் படித்தது