10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு
Dec 16, 2016
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வி தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி துவங்கி மார்ச் 31 வரை நடைபெறும் எனவும், 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 8ஆம் தேதி துவங்கி மார்ச் 30 வரை நடைபெறும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
02.03.17 – மொழித்தாள்-1
03.03.17 – மொழித்தாள்-2
06.03.17 –ஆங்கிலம் தாள்-1
07.03.17 –ஆங்கிலம் தாள்-2
10.03.17 – வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
13.03.17 – வேதியியல், கணக்குப் பதிவியியல்
17.03.17 – இந்திய கலாசாரம், தொடர்பு ஆங்கிலம், கணிப்பொறி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ்
21.03.17- இயற்பியல், பொருளாதாரம்
24.03.17- அரசியல் அறிவியல், புள்ளியியல், தொழில்பாட பிரிவுகள், நர்சிங்
27.03.17 – கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, ஊட்டச்சத்து மற்றும் உணவியல்
31.03.17 – உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதவியல்
இந்தத் தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1.15 வரை நடக்கும்.
——————–
10ஆம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை:
08.03.17 – தமிழ் முதல்தாள்
09.03.17 – தமிழ் இரண்டாம் தாள்
14.03.17 – ஆங்கிலம் முதல் தாள்
16.03.17 – ஆங்கிலம் இரண்டாம் தாள்
20.03.17- கணிதம்
23.03.17- அறிவியல்
28.03.17- சமூகஅறிவியல்
30.03.17- விருப்பப்பாடம்
இந்தத் தேர்வுகள் காலை 9.15 மணி முதல் மதியம் 12வரை நடக்கும்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு”