தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன் ராவ் நீக்கம்; புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்
Dec 22, 2016
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ்(58) வீடு உள்ளிட்ட 12இடங்களில் வருமான வரித்துறை நேற்று அதிகாலையிலிருந்து இன்று காலை வரை சோதனையில் ஈடுபட்டது. இதையடுத்து ராம மோகன் ராவ் தலைமைச் செயலாளர் பதவிதியிலிருந்து நீக்கப்பட்டார்.
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நில நிர்வாகத்துறை ஆணையராக உள்ளார், தற்போது தலைமைச் செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்துக்கொள்வார். 01.07.59ம் ஆண்டு பிறந்த இவர் 1981ல் பேட்ஜ் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பல்வேறு துறைகளில் இவர் பணியாற்றியுள்ளார், நல்வாழ்வுத்துறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து ராம மோகன் ராவ் நீக்கம்; புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்”