சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய 3 பேர் கைது
Dec 22, 2016
போயஸ் கார்டனுக்கு நெருக்கமானவரும், மணல் கான்ட்ராக்டருமான சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு மீது நேற்று முன்தினம் சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து நேற்று கைது செய்யப்பட்டனர். உடனடியாக இருவரும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் ஜனவரி 3வரை காவலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையொட்டி சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவர்களும் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர்களுமான மேலும் மூன்று பேரை (ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன்) கைது செய்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இவர்கள் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் ஜனவரி 4வரை காவலில் வைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
புழல் சிறையில் உள்ள சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு ஆகியோர் சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அம்மனு மீதான விசாரணை இன்று நடக்க உள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைதான சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய 3 பேர் கைது”