ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி
Jan 6, 2017
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைக்குப் பின் டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார்.
இவரது இறப்புக்குப் பின் அதிமுக கட்சியினர் மறைந்த ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பல்வேறு திட்டங்களை ஏற்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம்மனுவில் இருந்தது.
இம்மனுவை தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் விருது வழங்க உத்தரவிட முடியாது என்று அம்மனுவை தள்ளுபடி செய்தது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயலலிதாவுக்கு பாரதரத்னா விருது வழங்கக்கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி”