மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ராணுவ தளபதி: ராணுவ வீரர்களின் குறைகளைத் தீர்க்க புகார்பெட்டி



Jan 13, 2017

ராணுவ தளபதி பிபின் ராவத், தான் பதவியேற்ற பின் முதன் முதலாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

Siragu Bipin Rawat

காஷ்மீரின் நிலைமை கட்டுக்குள் உள்ளது, அங்கு அமைதி நிலவ அனைவரின் ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ராணுவ வீரர்கள் சமூக வலை தளங்களில் பேச வேண்டாம், உயர் அதிகாரிகளின் நடவடிக்கையில் திருப்தி இல்லையெனில் என்னிடம் கூறுங்கள் என்றும், தங்களது பிரச்சனைகளை தெரிவிக்க புகார்பெட்டி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பில் சவால்கள் உள்ளது, நவீன ஆயுதங்கள் வழங்க வேண்டும், வீர்களின் சமையலறை மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாநில அமைப்புக்கு பயங்கரவாதிகள் பிரச்சனை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள், தேவைபட்டால் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்படும் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ராணுவ தளபதி: ராணுவ வீரர்களின் குறைகளைத் தீர்க்க புகார்பெட்டி”

அதிகம் படித்தது