மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்



Jan 20, 2017

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போராட்டம் ஆங்காங்கே நடந்து வரும் நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இன்று(20.01.17) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

Siragu jallikkattu7

கடைகள் முழுவதும் மூடப்பட்டதுடன், ஆட்டோ, வேன்கள், டாக்சிகள் ஓடவில்லை. பேருந்துகள் மிகக் குறைந்த அளவே இயக்கப்படுகிறது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உணவகங்கள் மற்றும் மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் தீவிரமடையும் நிலை உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் முழு அடைப்புப் போராட்டம்”

அதிகம் படித்தது