மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு



Jan 20, 2017

ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி நான்காவது நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டம் தீவிரமடைவதால் தமிழக முதல்வர், பிரதமரை சந்தித்து பேசினார். ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவசர சட்டம் பிறப்பிக்க முடியாது என்று கூறினார் மோடி.

siragu-jallikkattu3

இதனையடுத்து முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவசர சட்டம் பிறப்பிக்க உள்ளதாகவும், ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல்முகுல் ரோத்தகி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளதால், இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம்: ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு”

அதிகம் படித்தது