பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா
Feb 15, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் போன்றோருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்தது உச்சநீதிமன்றம்.
இதையடுத்து பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சரணடைய இரண்டு வார அவகாசம் தேவை என்ற கோரிக்கையை சசிகலா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்டது. ஆனால் சசிகலா விடுத்த கோரிக்கையை நிராகரித்து, பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டது நீதிமன்றம்.
இதையடுத்து போயஸ் கார்டனிலிருந்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்கு காரில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் இன்று(15.02.17) மாலை 5.15 மணியளவில் சசிகலா மற்றும் இளவரசி பெங்களுரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில், நீதிபதி அஸ்வத் நாராயணா முன்னிலையில் சரணடைந்தனர்.
ஆனால் சுதாகரன் சரணடையவில்லை, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாளை சரணடைவார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார் சசிகலா”