மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் தர்ணா



Feb 18, 2017

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ரகசிய வாக்கெடுப்பை மறுத்தார் சபாநாயகர் தனபால்.

Siragu dmk assembly

இதையடுத்து 1 மணிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர். மீண்டும் 1 மணிக்கு கூடிய சட்டசபையில் மீண்டும் அமளி ஏற்பட்டதையடுத்து தி.மு.க எம்.எல்.ஏ-க்களை வெளியேறுமாறு உத்தரவிட்டு 3 மணி வரையில் அவை ஒத்திவைத்தார் சபாநாயகர்.

வெளியேற மறுத்த திமுக எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ-க்களை குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் உட்பட தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளியேவும் தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் சட்டசபைக்குள் தர்ணா”

அதிகம் படித்தது