மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்



Feb 18, 2017

தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில்தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து சட்டசபை இன்று காலை 11.00 மணியளவில் கூடியது. இதில் 230எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர்.

Siragu admk

இதில் ரகசிய வாக்கெடுப்பு நடக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கேட்டுக்கொண்டதை ஏற்காத சபாநாயகர், அங்கு ஏற்பட்ட கூச்சல் குழப்பம் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து சட்டசபையில் அமளி ஏற்பட்டதையடுத்து திமுக எம்.எல்.ஏ-க்களை வெளியேற்றினார் சபாநாயகர். இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட சட்டசபை மீண்டும் 3 மணிக்கு கூடியது. மீண்டும் இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.

பின்பு எண்ணிக்கழித்தல் முறையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏ-க்களும், எதிராக 11 எம்.எல்.ஏ-க்களும் வாக்களித்தனர்.

இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார்”

அதிகம் படித்தது