மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு



Feb 20, 2017

தமிழக முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி, தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சென்ற சனிக்கிழமை சட்டசபை கூட்டப்பட்டது. இதில் 230 எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொண்டனர்.

Siragu chennai highcourt

ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முறையிட்டனர். ஆனால் சபாநாயகர் தனபால் மறுத்துவிட்டார். அதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதனால் திமுக எம்.எல்.ஏ-க்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்களையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் வெளியேறினர். பின் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் பதிவானது. எனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்தார் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

சனிக்கிழமை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின். நாளை இவ்வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

 




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு”

அதிகம் படித்தது