மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: காவிரியில் கழிவு நீர் கலப்பு வழக்கில் வல்லுனர் குழு அமைக்க வேண்டும்



Feb 20, 2017

தமிழகத்துக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீரை காவிரியிலிருந்து திறந்து விட வேண்டும் என்று கடந்த வருடம் கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் அதை நிறைவேற்றவில்லை கர்நாடக அரசு.

Siragu Cauverydam

கர்நாடகத்திலிருந்து நீர் கிடைக்காததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு நிவாரண நிதியாக ரூ.2480கோடியைப் பெற்றுத்தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழகம். இதன் விசாரணையில் அடுத்த உத்தரவு வரும் வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 2000 கனஅடி நீரை காவிரியிலிருந்து திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரியில் பெங்களூரு உள்ளிட்ட கர்நாடக மாவட்டங்களில் இருந்து கழிவுநீர் காவிரியில் கலப்பதை எதிர்த்து தமிழக அரசு உச்சமீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று(20.02.17) விசாரணைக்கு வந்தது.

இவ்விசாரணையில் காவிரியில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க இரண்டு மாநிலங்களும் வல்லுனர் குழு அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இக்குழு அமைப்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று இரண்டு வாரங்களுக்கு இவ்வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: காவிரியில் கழிவு நீர் கலப்பு வழக்கில் வல்லுனர் குழு அமைக்க வேண்டும்”

அதிகம் படித்தது