மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல்வர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்



Feb 20, 2017

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்ற சனிக்கிழமை சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்தார். பதவியேற்றபிறகு இன்று(20.02.17)முதன்முறையாக தலைமைச்செயலகம் சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Siragu edappadi-palanisamy2

தலைமைச் செயலகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.

முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். மகளிருக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு 50% மானியம் அளிக்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். மேலும் மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் ரூ.12000 ரூபாயிலிருந்து ரூ.18000 ரூபாயாக உயர்வு, தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகள் மூடல், மீனவர்களுக்கு தனி வீடு கட்டும் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இரு மடங்காக உயர்வு போன்ற ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல்வர் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்”

அதிகம் படித்தது