மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆளுநரிடம் தமிழக சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கை தாக்கல்



Feb 20, 2017

அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சென்ற சனிக்கிழமை(18.02.17)தமிழக சட்டசபையில் நடைபெற்றது. அதில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று திமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் தனபால் மறுத்து விட்டார்.

Siragu dmk assembly

ரகசிய வாக்கெடுப்புக்கு மறுப்பு தெரிவித்ததால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளியேறினர்.

பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவித்தார் சபாநாயகர் தனபால்.

எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள், சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து ஆளுநரிடம் புகார் அளித்தனர். மேலும் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்து எதிர்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.

இதனால் சட்டசபையில் நடந்த நிகழ்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சட்டசபை செயலருக்கு உத்தரவிட்டார் ஆளுநர். எனவே இன்று(20.02.17) காலை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலருடன் ஆலோசனை நடத்தி அறிக்கை தயார் செய்யப்பட்டது.

சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்த அறிக்கையுடன், நிகழ்வுகள் குறித்த வீடியோவும் சட்டசபை செயலர் ஜமாலுதீன், ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று அளித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆளுநரிடம் தமிழக சட்டசபை நிகழ்வுகள் குறித்த அறிக்கை தாக்கல்”

அதிகம் படித்தது