சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
Mar 7, 2017
காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி தென் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
கடந்த நான்கு நாட்களாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழை இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை ஒரு சில இடங்களில் மழை பெய்யும் எனவும், சில இடங்களில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என்று அறிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு”