தமிழக விவசாயிகள்: நீதி கிடைக்கும் வரை போராட்டம்
Mar 17, 2017
தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் நான்கு நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளாக விவசாய கடன்கள் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்டவை அடங்கும்.
நான்கு நாட்களாக போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கைகளில் மண்டையோடு, மண்சட்டி வைத்துப்போராடுவது, அரை நிர்வாணமாக போராட்டம் நடத்துவது என்று நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நான்காவது நாளான இன்று பிச்சைக்காரர்கள் போல தமிழக விவசாயிகள் தங்களது வேட்டிகளை சாலைகளில் விரித்து படுத்தும், உடம்புகளில் மற்றும் நெற்றியிலும் நாமம் போட்டும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் வயதான விவசாயிகள் மயங்கி விழுகின்றனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னும் தொடர் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். உயிர் போகும் வரை போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்று தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.




கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக விவசாயிகள்: நீதி கிடைக்கும் வரை போராட்டம்”