நெடுவாசல் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 29வது நாளாக போராட்டம்
Mar 17, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது.
இத்திட்டத்தை முற்றிலும் கைவிடும் வரை போராட்டத்தைக் கைவிடுவதில்லை என்று நெடுவாசல் போராட்டக்கார்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷண்ன் நெடுவாசல் போராட்டக்காரகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இந்நிலையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் அருகே உள்ள நல்லாண்டார்கொல்லை என்ற பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டம் 29 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள போராட்டக்கார்களில் சிலர் மொட்டை அடித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசின் முடிவை வைத்தே இந்தப் போராட்டம் கைவிடப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெடுவாசல் அருகே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக 29வது நாளாக போராட்டம்”