மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல தடை



Mar 22, 2017

லேப்டாப் மற்றும் ஐ-பேடுகள், கேமரா உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எகிப்து, கத்தார் உள்ளிட்ட எட்டு நாடுகளிலிருந்து எடுத்துச் செல்ல தடை விதித்துள்ளது அமெரிக்கா. மேலும் மருத்துவ உபகரணங்கள், மொபைல் போன்கள் போன்ற பொருட்களுக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளித்துள்ளது.

Siragu airplane

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன் அரசும் இந்தத் தடையை பிறப்பித்துள்ளது. எகிப்து, லெபனான், துருக்கு, ஜோர்டான், துனிசியா, சவுதி அரேபியா போன்ற ஆறு நாடுகளிலிருந்து லேப்டாப், ஐ.பேடுகள், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்து வர தடை செய்துள்ளது பிரிட்டன் அரசு.

லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களில் வெடிக்கும் விதமாக உள்ளே வெடிபொருட்கள் மறைத்து வைத்து எடுத்துவர வாய்ப்பு இருப்பதால் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விமானங்களில் லேப்டாப் கொண்டு செல்ல தடை”

அதிகம் படித்தது