மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவில் தமிழக விவசாயிகளுக்காக போராடும் தமிழர்கள்



Mar 22, 2017

தமிழகத்தில் ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்றதையடுத்து, அமெரிக்காவில் பல இடங்களில் அங்குள்ள தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்தனர்.

Siragu Jallikattu_struggle2

இப்போராட்டத்திற்காக சமூக வலைதளங்களில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தீர்வு கிடைத்த பிறகு அந்த குழுக்கள் தமிழக நலன்களுக்காக மாற்றி அமைக்கப்பட்டன.

இப்போராட்டத்தைத் தொடர்ந்து ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஆதரவு பெருகியது.

இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிராக நடத்தும் வன்முறையை கண்டித்தும் அமெரிக்காவில் போராட்டம் நடத்தினர். தற்போது விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் களப்பணிகள் நடைபெற்று வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் தமிழக விவசாயிகளுக்காக போராடும் தமிழர்கள்”

அதிகம் படித்தது