மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

9 நாட்களாக டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்



Mar 22, 2017

விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 9 நாட்களாக டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் தமிழக விவசாயிகள்.

Siragu-farmers

போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பின் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தைக் கைவிட்டனர்.

எனினும் நியாயம் கிடைக்கும் வரை தமிழகத்துக்கு திரும்ப மாட்டோம் என்று தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இப்போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு போராடி வருகிறார்கள்.

நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பேச்சுவார்த்தையில் வறட்சி நிவாரணத்தை உடனடியாக வழங்க உறுதியளித்தார். இவரைத் தொடர்ந்து வேளாண்துறை அமைச்சரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் டெல்லி சென்று போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “9 நாட்களாக டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள்”

அதிகம் படித்தது