மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் வறட்சி நிவாரணம்: உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்



Mar 22, 2017

தமிழகத்தில் பருவமழை பொய்த்ததால் தற்போது வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சி 141 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சியால் விவசாயம் பொய்த்து விட்டது.

siragu-karnataka-farmer

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து மத்திய குழு ஜனவரி 22 முதல் 25 வரை ஆய்வு செய்தது. தமிழக வறட்சிக்கு ரூ.39,565 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது தமிழக அரசு.

தமிழகத்தில் வறட்சி குறித்த ஆய்வறிக்கையை டெல்லி சென்று ஆய்வு செய்தது. தொடர்ந்து தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2096 கோடி வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது. மேலும் மத்தியக்குழுவின் ஆய்வறிக்கை தொடர்பாக நாளை நடக்கும் உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் வறட்சி நிவாரணம்: உள்துறை அமைச்சகத்தின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்”

அதிகம் படித்தது