மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ரயில் டிக்கட் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை



Mar 22, 2017

மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்ய பயணச்சலுகை அளித்து வருகிறது. இதில் 60 வயது நிரம்பிய ஆண்களும், 58 வயது நிரம்பிய பெண்களும் மூத்த குடிமக்களாகக் கருதப்படுகிறார்கள்.

Siragu railway station

மூத்த குடிமக்களான பெண்களுக்கு 50 சதவீதமும், ஆண்களுக்கு 40 சதவீதமும் கட்டணச் சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சலுகை பெற ஓட்டுனர் உரிமை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி வந்தனர்.

இதனையடுத்து மூத்த குடிமக்கள் ரயில் டிக்கட் சலுகை பெற ஆதார் எண் கட்டாயம் என்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரயில்வேதுறை அறிவித்தது. இந்நிலையில் தற்போது ரயிலில் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரயில் டிக்கட் சலுகை பெற மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை”

அதிகம் படித்தது