மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் இரு விவசாயிகள் தற்கொலை முயற்சி



Mar 25, 2017

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மாந்தர் பகுதியில் 12வது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

Siragu-farmers

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கைகளில் மண்டை ஓடு ஏந்தி போராடுவது போன்ற பல்வேறு வடிவங்களில் தங்களது போராட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதில் பங்கேற்ற ரமேஷ் என்ற விவசாயியும், அகிலன் என்ற கல்லூரி மாணவனும் திடீரென மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினர்.

பத்து நிமிடங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கீழே இறக்கினர் சக விவசாயிகள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் நடைபெறும் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் இரு விவசாயிகள் தற்கொலை முயற்சி”

அதிகம் படித்தது