மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக விவசாயிகளுக்காகப் போராடும் அமெரிக்கத் தமிழர்கள்



Apr 8, 2017

மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுதல், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாஷின்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன்பு தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்துகிறார்கள்.

Siragu-tamil-farmers2

உள்ளூர் காவல்துறை அனுமதியுடன் இன்று(08.04.17) காலை 11 முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவில் மக்களிடம் கையெழுத்து வாங்கி இந்திய தூதரகம் வாயிலாக பிரதமருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இன்று(08.04.17) சியாட்டல் தமிழ்ச்சங்கம் சார்பில் காலை 8 மணி முதல் 10 மணி வரை பெல்வியூ நூலகத்தில் காந்தி சிலை அருகே தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினார்கள்.

இவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராடும் தமிழர்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார்கள்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக விவசாயிகளுக்காகப் போராடும் அமெரிக்கத் தமிழர்கள்”

அதிகம் படித்தது