மீண்டும் நெடுவாசல் போராட்டம் துவங்கியது
Apr 12, 2017
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து நெடுவாசலில் போராட்டம் துவங்கியது.
போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மத்திய மாநில அரசுகள், மக்களின் அனுமதியின்றி இத்திட்டம் செயல்படாது என்று அறிவித்தது. தொடர்ந்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 30 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டம் துவங்குவதற்கு மத்திய அரசு கையெழுத்திட்டது. மீண்டும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தனர் நெடுவாசல் மக்கள்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நெடுவாசல் பகுதியில், ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக ஒரு குழு ஆய்வு நடத்தி விரைவில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளது. எனவே அப்பகுதியில் இன்று காலை இருபது இளைஞர்கள் போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் நெடுவாசல் போராட்டம் துவங்கியது”