டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து போராட்டம்: டாஸ்மாக் கடையை மூட ஆட்சியர் உத்தரவு
Apr 12, 2017
திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(11.04.17) தொடர்ந்து ஏழு மணி நேரம் பெண்கள் உட்பட பலரும் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் அதிகம் கலந்து கொண்டனர்.
அப்போராட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். அதில் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன், ஒரு பெண்ணை கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். மேலும் ஒரு இளைஞருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.கன்னத்தில் அறை வாங்கிய பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவர் காது கேட்கும் திறனை இழந்தார் அந்தப் பெண்.
மதுக்கடைக்கு எதிரான இப்போராட்டத்தை வன்முறையாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும், கண்டனமும் தொடர்ந்து எழுந்து வருகிறது. பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த செய்தி அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், போலீசார் நடத்திய தடியடி குறித்து விளக்கத்தை இரண்டு வாரங்களுக்குள் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இன்று திருப்பூர் சாமளாபுரத்தில் உண்ணாவிரதம் மற்றும் கடையடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர், சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடையை மூட உத்தரவிட்டுள்ளார்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “டாஸ்மாக் கடை திறப்பதை எதிர்த்து போராட்டம்: டாஸ்மாக் கடையை மூட ஆட்சியர் உத்தரவு”