சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு
Apr 12, 2017
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் காற்று மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி அந்தமானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலை கொண்டுள்ளது. இதனால் மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நகரும் பட்சத்தில் தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இந்நிலையில் வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வுநிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாற வாய்ப்பு உள்ளது என்றும், பர்மா அல்லது வங்கதேசம் நோக்கி நகரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு”