டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்திக்கிறார்
Apr 22, 2017
பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் 40 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் நடத்தும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வடிவங்களில் நூதனமுறையில் போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை(23.04.17) டெல்லியில் நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்குச் செல்கிறார். இக்கூட்டம் நாளை காலை 9.30 க்கு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக தமிழக விவசாயிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார் தமிழக முதல்வர். முதல்வரின் சந்திப்பிற்குப் பின் விவசாயிகளின் போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “டெல்லியில் போராடும் விவசாயிகளை தமிழக முதல்வர் சந்திக்கிறார்”