சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மறு சீராய்வு மனு
May 4, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா-வைத் தவிர, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட மூன்று பேருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா பத்து கோடி அபராதமும் விதித்து கடந்த பிப்ரவரி 14-ந்தேதி தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து தண்டனை பெற்ற மூவரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் தனித்தனியாக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த சீராய்வு மனு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அப்போது கர்நாடக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சட்ட நிபுணர்கள் பலர், இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதற்கே வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மறு சீராய்வு மனு”