மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீட் தேர்வு கட்டுப்பாடுகளால் அவதிப்பட்ட மாணவர்கள்



May 8, 2017

அகில இந்திய அளவில் மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று(07.05.17) நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எழுதுவதற்கு மாணவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு அறைக்கு செல்வதற்கு முன்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.

Siragu neet exam

மூக்குத்தி, வளையல், முழுக்கை சட்டை, ஜீன்ஸ், ஷூ, புடவை, பைஜாமா, குர்தா, பர்தா உள்ளிட்டவைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் சிலர் அதனில் சிலவற்றை தவிர்க்காததால் தேர்வு அறைக்கு செல்வதற்கு முன் தங்களுடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு அறைக்கு சென்றனர்.

முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அனுமதிக்கப்படாததால், கத்தரியால் கிழித்த பின்னர் தேர்வு எழுத அனுமதித்தனர். இது போன்ற சோதனைகளால் மிகவும் மன வேதனை அடைந்தனர்.

இத்தேர்வு முடிவடைந்த பின்னர், இத்தேர்வு கடினமாக இருந்தது என்றும், மதிப்பெண் பெறுவது கடினம் என்றும் கருத்து தெரிவித்தனர். நீட் தேர்வில் கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது தொடர்பாக பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீட் தேர்வு கட்டுப்பாடுகளால் அவதிப்பட்ட மாணவர்கள்”

அதிகம் படித்தது