JVP/NPF யினரின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டது!
ராஜ் குணநாயகம்Jun 25, 2022
“சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு” என்கின்ற தலைப்பில் JVP/ NPF இனரால் 5ம் திகதி ஆனி, 2022 அன்று திருகோணமலையில் நடாத்தப்பட்ட மாநாட்டின் சாராம்சம்.
திருகோணமலை மாவட்ட JVP/NPF பிரதிநிதியின் கருத்துக்கள்:
*இல்மனைற் கனிமவளத்தை பயன்படுத்தி உறபத்திகளை மேற்கொள்ளல் அல்லது உச்ச பயன்பாட்டை பெறுதல்
* திருகோணமலையில் 400 குளங்கள் காணப்படுகின்றன
*இன, மத பேதமின்றி ஶ்ரீலங்காவின் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு எனஅனைத்து பிரதேசங்களில் வாழ்கின்றவர்களும் சம உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்வோம்- அதாவது அனைத்து மத தலைவர்களையும் அழைத்து சமாதானம் வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு “ஓம் சாந்தி சாந்தி சாந்தி” சொல்லிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் very simple என சொல்லாமல் சொல்வதுபோல- பி்.கு: ஐ.நாவினுடைய மனித உரிமைகள் சாசனமும்(UDHR) இலங்கை அரசியல் யாப்பின் உறுப்புரை 12 பிரிவு(அ) வும் அனைவருக்குமான சமத்துவமான உரிமைகள் பற்றி பரிந்துரைக்கின்றன.
JVP/NPF தலைவரின் கருத்துக்கள்:
*வழமைபோல் பாராளுமன்றத்தில் புள்ளிவிபரங்களோடு பேசுவதுபோல ஆட்சியாளர்கள் பெற்ற கடன்கள் விற்கப்பட்ட, விற்கப்பட இருக்கும் அரச சொத்துக்கள், ஊழல்கள், நாட்டில் தற்போதுள்ள டொலர் கையிருப்பின் நிலை, நாட்டின் பொருளாதார வங்குரோத்து நிலை என பல விடயங்களைப்பற்றி பேசியிருந்தார்
*இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவோ அல்லது வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பது தொடர்பாகவோ எதுவும் அலட்டிக்கொண்டவராக கூட காணமுடியவில்லை
உண்மையில் இவர்களுக்கு இந்நாட்டில் 6,7 தசாப்தங்களாக இனப்பிரச்சினை என்ற ஓர் கொடிய நோய் இருந்துவருவது கூட தெரியாதா இல்லை தெரிந்தும் மிக தந்திரமாக மூடி மறைக்க முற்படுகின்றனரா? முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை!
“சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு” -
மாநாட்டின் ஒட்டுமொத்த கோசம் “எங்களிடம்(JVP)/NPF நாட்டை ஆட்சி செய்ய ஒப்படையுங்கள் அதுவே ஒரே தீர்வு”
இவர்களிடம் நாட்டை…….?
ஈழன்.
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “JVP/NPF யினரின் உண்மை முகம் மீண்டும் வெளிப்பட்டது!”