மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இறையாண்மையும் இந்தீயமும் (கட்டுரை)

வள்ளி நாயகம்

Apr 1, 2013

1.இலங்கையைத் தனிமைப்படுத்தும் தீர்மானம் கூடாது.

2.இலங்கை இந்தீயாவின் நட்பு நாடு.

3.ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மற்றொரு நாட்டின் பாராளு மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுதல் கூடாது.

 

     இப்படியெல்லாம் ஒரு நாட்டின் எதிர்க் கட்சிகள், உதிரிக் கட்சிகள், சாதிக் கட்சிகள், மதவாதக் கட்சிகள் என எல்லா கட்சிகளும் விடிய விடிய கலந்தாலோசித்து முடிவு எதுவும் எட்டாமல், மிச்சம்,மீதி இருக்கும் தமிழ் இனத்தை உயிரோடு புதைக்க ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர். இது சரியா? என்றால் இந்தீயத்திற்கும், சனாதனத்திற்கும் சரி. வரிசையாகவே நிரல் செய்யப்பட்ட சந்தேகங்களைப் பார்ப்போம். மேற்படி மூன்றும் மற்றொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடுவது தவறான முன்னுதாரணமாக இருந்துவிடும் என்பது மையக் கருத்தாகவும், அப்படி நிறைவேறினால், அதுவே காஷ்மீரம் என்ற வில்லங்கத்தில் நம் நாடு மீது பாகிஸ்தானமும் மற்ற சர்வதேச நாடுகளும் தலையிடக் காரணமாகிவிடும் என்பது இவர்களின் வெளிப்படையான அச்சம்.

 

ஆனால் உள் நோக்கத்தில் இருப்பது என்னவோ, மனிதத் தன்மை எதுவுமற்ற சனாதன இந்தீயம் மட்டுமே செழித்திருக்க வேண்டும் என்பதற்கான கருத்தியல்தான் முதன்மையாக அவர்களிடம் இருக்கின்றது. இது எப்படி ?

 

     இந்தீயம் நள்ளிரவில் இருட்டு வேளையில் சுதந்திரம் வாங்கிய காலம் தொட்டே தமது நில விரிவாக்கத்திட்டத்தை கையில் எடுத்து சரிவரச் செய்தாலும் அது அதன் கொள்கையில் முழுமையாக ஈடேற முடியவில்லை. சாண் முன்னேற முழம் சறுக்கும் ஊழ் விதி மட்டுமே நடக்கின்றது. தன்னாட்சி கொண்ட காஷ்மீரம், தனது மேற்கு எல்லையில் ஊடுறுவல் ஏற்பட்ட போது வலிந்து உதவ வந்த நமது வல்லவ பட்டேல் (துணைப் பிரதமர்) என்பவரிடம் கூட காஷ்மீர மன்னர் ராஜா ஹரி சிங் என்பவர் எந்த வித அவசரமும் காட்டாமல், மிக நிதானமாக தனது நாடும்,மக்களும் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் பொது வாக்கெடுப்பிற்குப் பின்னர் தான் இணைவோம். எங்கள் நிலத்தை இந்தீயர்கள் நில உரிமை கொண்டாடக் கூடாது என்றெல்லாம் தெளிந்து தனது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே கையெழுத்திட்டு வலிய உதவ வந்த சனாதனக் கோஷ்டிகளிடம் உறுதி செய்து கொண்டார்.

 

     ஆக, தாங்களே ஒப்புக்கொண்ட பொதுவாக்கெடுப்பு என்பதனை இன்றளவும் நிறைவேற்றாத இந்தீயம் மற்றொரு நாட்டின் இறையாண்மையில் தலையிடக் கூடாது என்றுதான் முடிவெடுக்கும். ஆனால் இந்தீயம் என்னவோ முற்று முழுதாக ஒரே தேசிய அடையாளம் கொண்ட நாடு அல்ல. அதற்கு பல்வேறு தேசிய மொழிகள் கொண்ட தேசிய இனங்களைக் கொண்டது என்பதனை இந்தீயத்தில் குடியுரிமை உள்ளவர்களும் மறக்கக்கூடாது, இதனை ஆளும் அதிகாரக் கூட்டமும் மறக்கக்க் கூடாது.

 

இது ஒரு புறம் இருக்க, வேறொரு நாட்டின் இறையாண்மை என்பது என்ன ? அதாவது முழுக்க முழுக்க ஒரே தேசிய இனமாக இருக்கக் கூடிய (மொழி,பண்பாடு,நிலம் கொண்ட ஆனால் மதங்கள் வேறாக இருக்கலாம் ) நாடுகளில் வேண்டுமானால் இது வகையான கருத்தியல் சாத்தியமாகும். அப்போதும் மாற்று அரசியல் சிந்தனை உள்ள , மாற்று மதக் கொள்கையுள்ள மக்களைக் கொண்ட நாடுகளிலும் சர்வதேச மனித உரிமையும்,விசாரணையும் விசாரணைக்குட் படவும்,உட்படுத்தவும் முடியும். ஆனால் நம் சனாதன இந்தீயம் பூசி மழுப்புவதெல்லாம் என்ன ?

 

1.இலங்கையைத் தனிமைப்படுத்தும் தீர்மானம் கூடாது.

2.இலங்கை இந்தீயாவின் நட்பு நாடு.

3.ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராக மற்றொரு நாட்டின் பாராளு மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றுதல் கூடாது.

 

எட்டு கோடி மக்கள் தொகையைக் கொண்ட, தனித்த பழமையான தேசிய அடையாளம் கொண்ட தமிழர்களின் கோரிக்கைகளோ அல்லது நலனோ இந்தீயம் என்ற சனாதனத்திற்கு ஒரு பொருட்டே அல்ல. அதே சமயம் வங்காள மொழி பேசுவோரின் குறைகளோ, எல்லப் பிரச்சினைகளோ சனாதனத்தால் உதாசீனப் படுத்த முடியவில்லை. அவர்களின் எல்லைப்பிரச்சனை, தீவுகளின் பிரச்சனை, எல்லாம் அந்த அந்த மாநிலத்தின் பிரதிநிதிகள் கொண்டே தீர்க்கப்படுகின்றது.

 

கச்சதீவு, மூல்லைப்பெரியார், கூடங்குளம் (போராட்டம் நடக்கும் போதே மேலும் இரண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்ற வக்கிரம் ), மின்வெட்டு – தமிழர்களுக்கான மின் பகிர்வு, தொல்லியல் ஆய்வுகள், என எல்லாவற்றிலும் தமிழர்களுக்கு மட்டுமே துரோகிக்கும் அரசங்கம் இருக்கும் போது, அதுவும் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டில் புறக்கணிக்கப்படும் மக்களுக்கு மற்ற நாடுகள் தீர்மானம் சொந்த நாட்டிலோ அல்லது மனித உரிமை அரங்கத்திலோ கொண்டுவரப்படாமல் இருந்தால் அந்த வகையான அடிமைகளுக்கு நிவாரணம் எங்கு கிடைக்கும் ???

 

அப்படிப் பட்ட அடிமைகள் தான்

 

1.காஷ்மீர மக்கள்,

2.இந்தீயத் தமிழ் அடிமைகள்,

3.மலையகத் தமிழர்கள்.

 

இப்போது சொல்லுங்கள் இந்தீயம் செய்யும் துரோகமும், கண் துடைப்பும் திட்டமிட்ட இன அழிப்பே என்பது அல்லாமல் வேறு என்ன ????

 


வள்ளி நாயகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இறையாண்மையும் இந்தீயமும் (கட்டுரை)”

அதிகம் படித்தது