மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அசாதாரண அரசியல் சூழ்நிலையால் மாநிலம் முழுவதும் சோதனை



Feb 13, 2017

தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையால் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சமூக விரோதிகள் கலவரங்களில் ஈடுபடலாம் என்ற தகவல்கள் காவல் துறைக்கு கிடைத்துள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து ரவுடிகள் சென்னையில் தங்கியுள்ளதாகவும் செய்திகள் கிடைத்துள்ளதையடுத்து சென்னை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Siragu arrest

கடந்த இரண்டு நாட்கள் நடந்த சோதனையில் சென்னையில் தங்கியுள்ள 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்த உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென், வட மாவட்டங்களில் ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டத்தில் 31, மதுரையில் 17, தேனியில் 19, தூத்துக்குடியில் 77, திண்டுக்கலில் 53, கரூரில் 4 , கடலூர், விருத்தாச்சலம், பண்ருட்டி பகுதிகளில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அசாதாரண அரசியல் சூழ்நிலையால் மாநிலம் முழுவதும் சோதனை”

அதிகம் படித்தது