மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவால் இரு சக்கர வாகனங்களின் விலை சரிவு



Mar 30, 2017

புகை மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அதன் வகையில் பாரத் ஸ்டேஜ்(பி.எஸ். 3) என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது.

Siragu bike

இதன்பிறகு கடும் நிபந்தனைக்குட்பட்டு வாகனங்களின் இஞ்சின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்.4 விதிமுறை 2010 முதல் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இந்த விதிமுறை வரும் ஏப்ரல் 1 முதல் முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

பி.எஸ்.3 விதிமுறைகளுடன் கூடிய 8 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் இருப்பதாகவும், எனவே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் ஏப்ரல் 1 முதல் பி.எஸ்.3 வாகனங்களை பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. இதனால் இரண்டு நாட்களில் விற்பனை செய்தாக வேண்டும் என்பதால் பி.எஸ்.3 விதிமுறைகளுடன் கூடிய வாகனங்களின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவால் இரு சக்கர வாகனங்களின் விலை சரிவு”

அதிகம் படித்தது