மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உச்சநீதிமன்றம் உத்தரவு: சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உடனே சரணடைய வேண்டும்



Feb 14, 2017

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி போன்ற நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Siragu Sasikala3

ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி போன்றோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பு ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பொருந்தும் என்றும், ஜெயலலிதா இறந்ததால் இவ்வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்றும் அறிவித்துள்ளனர்.

இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உடனே சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உச்சநீதிமன்றம் உத்தரவு: சசிகலா உள்ளிட்ட 3 பேரும் உடனே சரணடைய வேண்டும்”

அதிகம் படித்தது