மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை



Feb 9, 2017

ஜெயலலிதா மரணத்திற்குப் பின் முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் பெற்றார். அதையடுத்து ஜெயலலிதாவின் தோழியான சசிகலா அதிமுக-வின் பொதுச்செயலாளர் ஆனார். பின் சசிகலாவை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Siragu sasikala

இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். விரைவில் சசிகலா முதல்வர் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பி.எஸ், தான் கட்டாயப்படுத்தப்பட்டதால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்ததையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பரபரப்பு சூழலில் சசிகலா, முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கு நாளை மதியம் விசாரணைக்கு வருகிறது.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை”

அதிகம் படித்தது