மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதம்



Dec 22, 2016

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

siragu-jallikattu

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது மத்திய அரசு. ஆனால் இதை எதிர்த்து விலங்குகள் நல கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மீண்டும் அனுமதி மறுத்து உத்தரவிட்டது.

இவ்வழக்கு நிலுவையில் உள்ளதால் மூன்றாண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை.

இந்நிலையில் இந்த பொங்கல் திருநாளுக்காவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே பொதுமக்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர்.




இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி அலங்காநல்லூரில் உண்ணாவிரதம்”

அதிகம் படித்தது